Monday, January 15, 2007

கவிமடம் Inc.

Mission


உணர்வுபூர்வமாகவே அணுகப்பட்டுவரும் 'கவுஜை'களை தொழில்ரீதியிலான பார்வையோடு அணுகி, எல்லா சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் உடனடியாகக் 'கவுஜை' புனைவதை பரவலாக்குதல்


Vision


கவுஜர் என்று அறியாத கவுஞர்களுக்கும், கவுஞர் என்று அறியாத பாமரர்களுக்கும் கவுஜைகளை எளிமையாக்கி பொறவிக்கவுஞர்களை உருவாக்கி எல்லோரும் இந்நாட்டுக் கவுஞர் என்ற நிலை எய்துவதே எம் குறிக்கோள்.


செயல்பாடுகள்


1. நூறு உயிராவது செத்தால்தான் கவுஜை புனைவோம் என்று இறுமாந்திருக்கும் பிரபலக்கவிஞர்களிடம் இருந்து தமிழைக் காப்பாற்றி, ஒரே ஒரு ஈ எறும்புக்கு சுண்டுவிரல் சுளுக்கு்க்க என்றாலும் துக்கம் பொங்கி வரும்்வரும் படைப்புகளை உருவாக்குதல், பரவலாக்குதல்.


2. கவுஜைகளில் நெடில் பயன்பாட்டைத் தரப்படுத்தி, ஏ எங்கே போட வேண்டும், ஓ எங்கே போடவேண்டும் என்பதை எளிமைப்படுத்துதல்.



3. பெண்ணை ஒப்பிட இருக்கும் 5 பில்லியன் சமாசாரங்களை (நிலவு, கடல், இயற்கை இன்ன பிற) இன்னும் அதிகப்படுத்தி காதல் கவுஞர்களின் இருப்பை சுவாரஸ்யப்படுத்தல்.



4. கட்சிமாறிய கவுன்சிலர் முதல் புஷ் வரை யாரையும் திட்டி உடனடிக் கவிதை புனையும் ஆற்றலை உருவாக்குதல்.



5. அஞ்சல் நவீனத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு 'ஏலேலோ ஐலேசா'பாடி நகர்த்தி மின்னஞ்சல் நவீனத்துவமாக பரிணாம வளர்ச்சி பெறச்செய்தல்.



6. கீழ்க்காணும் தர அளவுகளில் கவுஜைகளைப் புனைதல்:

அ. புரிதல் அளவு - 1 - 2 - 3 - 4 - 5 (ஒன்று - சுலபமாகப் புரியும், 5 - எழுதினவனுக்கே புரியாது)
ஆ. உணர்ச்சி அளவு 1 - 2 - 3 - 4 - 5 (ஒன்று - நெடில் பிரயோகம் இல்லை, 5 - கவிதை முழுக்க உயிர்நெடில்தான்)
இ. நவீனத்துவம் அளவு 1 - 2 - 3 - 4 - 5 (1 - வாரமலர் வகையறா, 5 விருட்சம் வகையறா)


7. பிரபலக்கவிஞர்களின் கவுஜைகளைப் பிரித்து மேய்ந்து திறனாய்வு செய்தல்.



இவைகளெல்லாம் வெறும் வரைவுத் திட்ட ஆரம்பம்தான்தான்.. இன்னும் இது கூடும்.




இந்நேரம் மட நிர்வாகிகள் யாரென்று கண்டுபிடித்திருப்பீர்கள்.
இருந்தாலும் காலம் கனியும்போது் மூத்த உறுப்பினர்கள் பெயர்கள் தெளிவுபடுத்தப்படும்.

முக்கியச் செய்தி:



புதிய உறுப்பினர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
ஆனால் நிபந்தனையோடு
தங்கள் கவுஜை புனையும் திறனை மெய்ப்பித்து,
ஆதாரங்களுடன் இந்த மின்னஞ்சலுக்கு
விண்ணப்பித்தால்
பரிசீலனைக்குப் பிறகு
சேர்க்கப்படுவார்கள்

புது உறுப்பினர்கள் தங்கள் பயிற்சிக்காலத்தில் பட்டை தீட்டப்பட்டு, பொறவிக்கவுஜர்களோடு போட்டி போடும் வகையில் உருவாக்கப்படுவார்கள். அதற்கு்கு மடம் உத்தரவாதம்.

தப்பித்தவறி மடத்தில் சேர்ந்து மடத்தனமாகக் கவிதை எழுத ஆரம்பித்தால் மடத்திலிருந்து விலக்கப்படுவதோடு, அவர்களுக்கும் அவர்கள் கவிதைகளுக்கும் மடம் ஒருபோதும் பொறுப்பேற்காது.

2 comments:

ஒரு பொடிச்சி said...

கவிமடத்து கண்மணிகளே,
நீங்க 'கவுஜை'கள புகழுறீகளா, இகழுறீகளா?

சரி நம்மால "முடிஞ்சது" இவ் *வதைகள சமர்ப்பிக்கிறேன்:

1 -
நிலா வானத்தில்
நீ நிலத்தில்
நான் ஊ...ஞ்சலில்

(இது ஹை'கூ'வாம்)
2-
கண்ணே, நான் காப்பியடித்து எழுதிய கவிஜையை உனக்கு அனுப்பியும்
ஒரு பேப்பர் கூடவா கிடைக்கவில்லை,
நீயும் காப்பியடித்தாவது எனக்கொரு
பதிலை எழுதியிருக்கக் கூடாதா பெண்ணே(ஏஏஏஏ... - இது மன effect கண்டுக்காதிங்க)



ஒரு நம்பர் 5 கவிதை தாறன், அத பாருங்க:
உள்ளுறங்கும் இருண்மை வெளியில்
வெளிச்சம் அடித்து... ................................



அடித்து??


இருட்டில வெளிச்சம் அடிச்சா அப்புறமென்ன
ஒரே வெளிச்சமா இருக்கும். :-)

நாமக்கல் சிபி said...

நிலவென்றுதான் நினைத்தேன்!
இப்போது புரிகிறது!
நிலவும் சுடுமென்று!

(எனக்கும் மடத்துல எடம் உண்டா?)