Tuesday, January 16, 2007

எழுத்து சிக்கன கவுஜை

கவுஜைகளில் சொற்சிக்கனம் மிக அவசியமானது என்று எல்லாருக்கும் தெரியும் - கவுஜை எழுதுபவர்களைத் தவிர.

ஆனால், கவுஜைகளிலேயே சொற்சிக்கனம் போய் இப்போது எழுத்துச் சிக்கனம் வரை கவுஜை அபார வளர்ச்சியில் சிக்கிக் கொண்டு மூச்சு முட்டித் தவிக்கிறது.

அப்படி ஒரு அபார எழுத்து சிக்கன கவுஜை ஒன்றை இன்று பிரித்து மேயலாம்.


நீ
வா
தா
சீ
போ
தூ!

காட்சி 1:

காதலன் காதலியைப் பார்த்து சொல்வது

காட்சி:2

வா என அழைக்கிறான்

காட்சி:3

தா எனக் கேட்கிறான்.
என்ன கேட்டான் என்பதை அவரவர் கற்பனை செய்து கொள்ளுங்கள்

காட்சி:4

சீ! எனக் காதலி சிணுங்குகிறாள் தராமல்

காட்சி:5

சனியனே! இதுக்கா உன்னை தள்ளிக்கிட்டு வந்தேன் என்று மனதுக்குள் நினைத்தவாறே 'போ' என்கிறான் காதலன்

காட்சி:6

இதெல்லாம் ஒரு கவிதையா? என்று கடுப்புடன் வாசகர்கள் செய்வது

கவிமடத்துக் கண்மணிகள்

5 comments:

வாசகன் said...

ஸூப்பர் தலய்ங்களா!

ஏழே எழுத்துல கவுழ எளுதுன ஒருத்தருக்கு நாலே எழுத்துல கமென்ற் வெச்சேன். அத ஞாபகப்படுத்தீட்டீங்களே....! நல்லா இருங்கப்பு!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வாசகன்.

அடிக்கடி இந்தப்பக்கம் வரவும், கவுஜை மழையை அள்ளிப்பருகவும்.

சென்ஷி said...

ஹி

ILA (a) இளா said...



ம்

நாமக்கல் சிபி said...

//காட்சி:6

இதெல்லாம் ஒரு கவிதையா? என்று கடுப்புடன் வாசகர்கள் செய்வது
//

ங்கே!