Tuesday, July 17, 2007

கவி முடம் (எழுத்துப்பிழையல்ல)

கவுஜை மடமாம் கவிமடம்
தற்காலிகமாய் காலி இடம்.

தழும்பாதாமே நிறைகுடம்
அதுபோலல்ல இது கவிழ்ந்த குடம்.
அதுபோல் அல்ல. இது, கவிழ்ந்த குடம்.

அழகிய கவிதைகள் பிறக்குமிடம்
தெரியாமல் போனதென்ன இருக்குமிடம்.

ஈ கலப்பை எடுத்திடு இந்நிமிடம் - கவிஞா
ஈ கலப்பை எடுத்திடு இந்நிமிடம்
தீர்ப்போம் இந்தக் கவிமுடம் - வா
தீர்ப்போம் இந்தக் கவிமுடம்.

கவிமடம் அநேக நாளாய் பூட்டிக்கிடப்பதை அறிந்து மனம் வருந்தி டையட் பெப்சியை அருந்தியவாறே கண்ணீரில் எழுதிய கவுஜை. மடாதிபதிக்கு சமர்ப்பணம்.

1 comment:

Subbiah Veerappan said...

கைவிடடதால் கவிழ்ந்தகுட்ம்
மனம்விட்டதால் கவிமுடம்
ஏனில்லை மறுகுடம்?
எடுங்களொரு் புதுக்குடம்!